farm
விவசாய பீடத்தினுடைய வீட்டு தோட்ட ஊக்குவிப்புச் செயற்திட்டம்
கிழக்குப்பல்கலைக்கழக விவசாயபீடத்தினுடைய பல்கலைக்கழக பண்ணை மற்றும் பேண்தகு விவசாயத்திற்கும் மூலவள முகாமைத்துவத்திற்குமான நிலையம் என்பன இணைந்து விவசாயபீடத்தில் கடந்த வாரம் தற்போதய பொருளாதார நெருக்கடி மற்றும் மரக்கறி உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி என்பவற்றை கருத்தில் கொண்டு வீட்டுத்தோட்ட செய்கையினை ஊக்குவிக்குமுகமாக விவசாயபீடத்தினுடைய பீடாதிபதியின் தலைமையில் பீடத்தினுடைய கல்விசார் உத்தியோகத்தர்கள், நிறைவேற்று உத்தியோகத்தர்கள் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்களிற்கு பைகளில் நடப்பட்ட கத்தரி மற்றும் மிழகாய் கன்றுகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
பட்டி பொங்கல் விழா 2020
பன்னெடுங்காலமாக விவசாயிகளால் உழுதுண்டு வாழ உதவிய காளைகளுக்கும் கறவைப் பசுக்களுக்கும் நன்றி செலுத்துகின்ற உழவர் திருநாளாம் தைபொங்கல் தினத்தை அடுத்து வருகின்ற பட்டிபொங்கல் நிகழ்வானது கிழக்குப் பல்கலைக்கழக விவசாயபீடத்தினுடைய பல்கலைக்கழகப் பண்ணையில் 16.01.2020 (வியாழக்கிழமை) மு.ப.11.30 மணியளவில் விவசாயபீட பதில் பீடாதிபதி, பதில் பதிவாளர், நிதியாளர் , பதில் மிருகவிஞ்ஞானத்திணைக்களத் தலைவர், கல்விசார் உத்தியோகத்தர்கள், நிருவாக உத்தியோகத்தர்கள,கல்விசாரா உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய ஊழியாகளினுடைய பங்கேற்றலுடன் வெகுவிமாசையாகக் கொண்டாடப்பட்டது