கிழக்கு பல்கலைக்கழக விவசாய பீடத்தினுடைய பல்கலைகழக பண்ணையினால் நடாத்தப்பட்ட உணவு பாதுகாப்பினை உறுதிசெய்வதற்கான விவசாய விழிப்புணர்வு செயற்திட்டம்
கிழக்கு பல்கலைக்கழக விவசாய பீடத்தினால் பிரதேச மட்டத்தில் உணவுப்பாதுகாப்பினை உறுதிசெய்யும் வகையில் விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் பல்கலைகழக பண்ணையூடாக 07.10.2022 அன்று முற்பகல் 10 மணியளவில் விழிப்புணர்வு செயற்திட்டமொன்று நடைபெற்றது. இதில் பல்கலைக்கழக சுற்றுவட்டாரத்திலுள்ள கொம்மாதுறை, பலாச்சோலை, வந்தாறுமூலை போன்ற பிரதேசங்களில் இருந்து விவசாயத்தினை மேற்கொள்ளும் சுமார் 20 இற்கும் மேற்பட்ட கிராம மக்கள் வருகை தந்தனர்.
இவ்விழிப்புணர்வு நிகழ்வானது பலாச்சோலையிலுள்ள பல்கலைகழக பண்ணையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சகலவிதமான நடுகை விதைகளும் அதன் வகைகள், நடுகை மற்றும் பராமரித்தல் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது. அதுமட்டுமன்றி நாற்றுமேடை அமைத்தல், நாற்றுமேடை தொற்றுநீக்கல் மற்றும் கூட்டெரு தயாரிக்கும் முறைகள் என்பவற்றை செய்முறை மூலம் விளக்கமளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கிராம மக்களிற்கும் பண்ணை உத்தியோகத்தர்களிற்குமிடையிலான விவசாயம் சம்மந்தமான கலந்துரையாடலும் சந்தேகங்கள் மற்றும் விவசாயம் சார்ந்த பிரச்சினைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வுகளும் வழங்கப்பட்டது.