Skip to main content

பலாச்சோலைக் கிராமத்தில் கிழக்குப் பல்கலைக்கழக விவசாயபீடத்தினால் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையினை ஊக்குவிக்கும் செயற்திட்டம்

palasholai1.jpg

கிழக்குப்பல்கலைக்கழக விவசாயபீடத்தினால் பிராந்திய மட்டத்தில் விவசாயிகளினுடைய மேம்பாட்டிற்காக பலவகையான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்திவருகின்றது. 
அந்தவகையில் கிழக்குப்பல்கலைக்கழக விவசாயபீடம் வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையை உணவுப்பாதுகாப்பினை உறுதிசெய்யும் வகையில் அண்மைக்காலமாக கிராம மக்களிடையே ஊக்குவித்து வருகின்றது. 
இதன்; அடிப்படையில் பல்கலைக்கழக பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட கத்தரி மற்றும் மிளகாய் கன்றுகள் பைகளில் நடப்பட்டு சிறிது காலம் பண்ணையில் பராமரிக்கப்பட்டு சுமார் 50 பலாச்சோலைக்கிராம மக்களிற்கு 09.09.2022 அன்று காலை 10.30 மணியளவில் விவசாயபீடத்தினுடைய முன்றலில் பீடாதிபதியின் தலைமையில் பகிர்ந்தளிக்கப்பட்டன. 
இச்செயற்திட்டத்திற்கான செலவீனமாக 16,000.00 ரூபாவினை பீடத்தினுடைய கல்விசார் உத்தியோகத்தர்கள்இ நிறைவேற்று உத்தியோகத்தர்கள் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்களினால் பொறுப்பேற்கப்பட்டது. 
இந்நிகழ்வில் விவசாயபீடத்தினுடைய பீடாதிபதி, பேராசிரியர்கள்,விரிவுரையாளர்கள், உதவிப்பதிவாளர், பண்ணை முகாமையாளர், பண்ணை மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், ஆய்வுகூட கண்காணிப்பாளர்கள், பயிலுனர்கள் மற்றும் பீட மாணவர்கள் கலந்து சிறப்பித்திருந்தமை சிறப்பம்சமாகும்.