Skip to main content

விவசாய பீடத்தினுடைய வீட்டு தோட்ட ஊக்குவிப்புச் செயற்திட்டம்

farm-n1.jpg

கிழக்குப்பல்கலைக்கழக விவசாயபீடத்தினுடைய பல்கலைக்கழக பண்ணை மற்றும் பேண்தகு விவசாயத்திற்கும் மூலவள முகாமைத்துவத்திற்குமான நிலையம் என்பன இணைந்து விவசாயபீடத்தில் கடந்த வாரம் தற்போதய பொருளாதார நெருக்கடி மற்றும் மரக்கறி உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி என்பவற்றை கருத்தில் கொண்டு வீட்டுத்தோட்ட செய்கையினை ஊக்குவிக்குமுகமாக விவசாயபீடத்தினுடைய பீடாதிபதியின் தலைமையில் பீடத்தினுடைய கல்விசார் உத்தியோகத்தர்கள், நிறைவேற்று உத்தியோகத்தர்கள் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்களிற்கு பைகளில் நடப்பட்ட கத்தரி மற்றும் மிழகாய் கன்றுகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இந்நிகழ்வில் பீடாதிபதி, பேண்தகு விவசாயத்திற்கும் மூலவள முகாமைத்துவத்திற்குமான நிலையத்தின் பணிப்பாளர், திணைக்கள தலைவர்கள், விரிவுரையாளர்கள், உதவிப் பதிவாளர், பண்ணை முகாமையாளர் மற்றும் பீடத்தினுடைய உத்தியோகத்தர்கள் சகலரும் கலந்து சிறப்பித்திருந்தமை சிறப்பம்சமாகும்.
 

Taxonomy